மத்திய அரசின் UDISE+ அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 14.67 லட்சம் பள்ளிகளில் சுமார் 1.05 லட்சம் பள்ளிகளில் மாணவிகளுக்கான முறையான கழிப்பறை வசதிகள் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 32,965 பள்ளிகளில் கழிப்பறைகளே இல்லாத சூழலும், 71,959 பள்ளிகளில் கழிப்பறைகள் இருந்தும் அவை செயல்படாத நிலையிலும் உள்ளன. ஸ்மார்ட் வகுப்பறைகள், அதிவேக இன்டர்நெட் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த நவீனக் கற்றல் முறைகளை நோக்கி இந்தியக் கல்வித் துறை வேகமாக முன்னேறி வரும் வேளையில், இந்த அடிப்படை உள்கட்டமைப்பு குறைபாடு பெரும் முரண்பாடாக உருவெடுத்துள்ளது.
பாதுகாப்பான மற்றும் சுத்தமான கழிப்பறை வசதிகள் இல்லாதது மாணவிகளின் கல்வியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, வளரிளம் பருவ மாணவிகள் மாதவிடாய் காலங்களில் தேவையான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் இன்றி பள்ளிகளில் கடும் சிரமங்களைச் சந்திக்கின்றனர். இது அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், தொடர் பள்ளி ஆப்சென்ட்டிற்கும் , இறுதியில் பல மாணவிகள் தங்கள் பள்ளிப் படிப்பைப் பாதியிலேயே கைவிடுவதற்கும் முக்கியக் காரணமாக அமைகிறது.
தொழில்நுட்பங்களை வகுப்பறைகளுக்குள் கொண்டு வருவது மட்டுமே முழுமையான கல்வி வளர்ச்சியைத் தந்துவிடாது என்பதால், மாணவிகளுக்கான அடிப்படை சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியமாகும். எனவே, தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே, கழிப்பறை வசதிகள் இல்லாததால் எந்தவொரு மாணவியும் கல்வியை இழக்கக்கூடாது என்பதை உறுதிசெய்ய அரசு உடனே அனைத்துப் பள்ளிகளிலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகளைக் கட்டித் தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மழைக்கால பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், ஒவ்வொரு…
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கு மண்டலத்தில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வந்த செந்தில் பாலாஜி, 2026 சட்டமன்றத் தேர்தலில்…
தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பதவிகளை வழங்குவதற்காகப் பணம் பெறப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் மதுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை…
சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்த ஓய்வுபெற்ற பெண் அதிகாரி கைது…
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…