பிரபல நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட் மாஸ்டர் கலாட்டா பிங்க் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பம், திரைப்பட அனுபவங்கள் மற்றும் மறைந்த தன் தாய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தனது தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது குறித்து உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் குறித்து பலர் விமர்சிப்பதாகவும், “இந்த வயதில் இது தேவையா?” என்று பலர் கேலி செய்ததாக கூறினார். இந்தப் படம் ஒரு அடல்ட் காமெடியான படம் என்றும் பெண்கள் உணர்வுகளையும், அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனைகளையும் பேசும் படம் என்று கூறினார். மேலும் வனிதா விஜயகுமார், கதறி அழுத புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகிய நிலையில், அதை குறித்து ராபர்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்னுடைய அம்மாவிற்கு வனிதாவை பிடிக்காது, “நீ எதுக்கு வனிதாவுடன் நடிச்ச?” என்று எல்லாரையும் போல் என்னை திட்டினார். இருப்பினும், வனிதா விஜயகுமாரும், ஜோவிகாவும் தனது தாயார் மறைந்த பொழுது, நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும், ராபர்ட் தனது தந்தையார் பற்றியும் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். தனது தாயாருக்கு 75 வயது என்றும், ராபர்டின் நடன திறனுக்கு தனது தாயாரை முதல் வழிகாட்டி என்றார். தனது தாயார், ஒரு நடன பயிற்சியாளர் என்பதால், இளம் வயதிலேயே நடனத்தின் நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். ராபர்டின் திறமையை கண்டு, அவரை முறையாக நடனப் பயிற்சிக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறினார். நடனம் தான் அவர் எனக்கு கொடுத்த சொத்து. என்னால் கால் அடிபட்டு முடியாத போதும், அவர் இறுதி ஊர்வலத்தில் அவருக்காக அரை மணி நேரம் ஆடிக்கொண்டே சென்றேன். மேலும் “என் தாயார் நடனத்தின் மூலமாகவே வாழ்ந்தார்” என்று மனநெகிழ்வுடன் பேசினார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…