தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே ஓடிடி என்பது தயாரிப்பாளர்களை காக்க வந்த கடவுளாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இதற்கு முன்பு தியேட்டர் மற்றும் தொலைக்காட்சி உரிமைகளை மட்டுமே தயாரிப்பாளர்கள் பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் ஓடிடியில் வரும் பணத்தை வாங்கி ஹீரோக்களுக்கே சம்பளம் கொடுக்கலாம் என தயாரிப்பாளர்கள் நினைக்கும் அளவுக்கு புதிய படங்கள் பல கோடிகளுக்கும் விலை போய் வருகின்றது. அதன் காரணமாக பெரிய நடிகர்கள் தங்களின் சம்பளங்களை தாறுமாறாக ஏற்றி விட்டனர். பெரும்பாலும் அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள்தான் அதிக விலை கொடுத்து பெரிய படங்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் ஓடிடியில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 5 தமிழ் திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தக்லைப்:
மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தான் தக்லைப். இந்த படத்தில் சிம்பு, திரிஷா மற்றும் நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தை netflix நிறுவனம் அதிகப்படியாக 149.7 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
லியோ:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தத் திரைப்படத்தை நெட்பிக்ஸ் ஓடிடி 125 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
ஜனநாயகன்:
இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் தளபதியின் கடைசி படமான ஜனநாயகம் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் தட்டி தூக்கி உள்ள நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை 121 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
கூலி:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்தப் படத்தின் ஓடிடி வெளியிட்டு உரிமையை 120 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கியுள்ளது.
கோட்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தில் சினேகா, லைலா, பிரபுதேவா மற்றும் பிரசாந்த் உள்ளிட்டோ நடித்திருந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் 112 கோடி கொடுத்து வாங்கி இருந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…