தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை இருந்த நிலையில் தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
இதனிடையே சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் விஜய் உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வந்தது. இந்நிலையில் விஜயின் பிரச்சாரத்திற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தேவையற்றது என ஓபிஎஸ் கூறியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தான் விஜயுடன் கூட்டணி அமைப்பதாக கூறப்படுவது வதந்தி என்றும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் கூட்டணி அமைக்க உள்ளதாக பேசப்படும் நிலையில் தற்போது ஓபிஎஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…