“CM விஜய்க்கே அவங்க பேரு தெரியாது”…. மேடையில் பட்டப்பெயர் பட்டியலை வெளியிட்டு அதிரடித்த உதயநிதி ஸ்டாலின்….!

Spread the love

தமிழக அரசியலில் இடைத்தேர்தல் களம் தற்போது பெரும் சூட பிடித்துள்ளது. தவெக ஆட்சி அமைத்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள சூழலில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய்யின் விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த திமுக, தற்போது நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் தனது தாகத்தைத் தீர்க்கும் வகையில் தவெகவை முதன்மை இலக்காகக் கொண்டு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அமைச்சரவையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். “தமிழகத்தில் உள்ள தவெக அமைச்சர்களின் பெயர்கள் யாருக்கும் தெரியாது; மாறாக மக்கள் அவர்களுக்குப் பட்டப்பெயர்களைத் தான் வைத்துள்ளார்கள்” என்று கூறிய உதயநிதி, ‘அரை டவுசர் அமைச்சர், சங்கி அமைச்சர், உருட்டுக்கட்டை அமைச்சர், பிளாக் டிக்கெட் அமைச்சர், பவுடர் அமைச்சர், திருட்டு விசிடி அமைச்சர், லாட்டரி அமைச்சர்’ என அடுக்கடுக்கான பட்டியலை வெளியிட்டுப் பிரச்சாரக் களத்தை அதிர வைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த அமைச்சர்களின் பெயர்கள் பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல், முதல்வர் விஜய்க்கே தெரியாது என்று எள்ளலாகக் குறிப்பிட்டார். “விஜய் எப்படி வெற்றி பெற்றார் என்பது அவருக்கே தெரியவில்லை, நமக்கும் புரியவில்லை. அதனால் கடந்த முறை செய்த தவறைத் தாராபுரம் மக்கள் மீண்டும் செய்துவிடக் கூடாது” என்று மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இத்தகைய சாடல்கள் அடங்கிய உதயநிதியின் பேச்சு, தற்போது திமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் தவெக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் மத்தியிலும் ஏற்கனவே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, “மே 11 அன்று எம்.எல்.ஏ-வாகப் பொறுப்பேற்ற இந்த ‘பெட்டி பாமா’ (சத்தியபாமா), வெறும் பதினோரே நாட்களில் மே 22 அன்று ‘பெட்டி’ வாங்கிக்கொண்டு தவெகவில் இணைந்துவிட்டார்” என்று மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார். இதனால் இடைத்தேர்தல் களம் திமுக மற்றும் தவெக இடையேயான நேரடி அரசியல் போர்க்களமாக மாறியுள்ளது.

Nanthini

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

9 மணத்தியாலங்கள் ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

10 மணத்தியாலங்கள் ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

10 மணத்தியாலங்கள் ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

10 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

10 மணத்தியாலங்கள் ago