திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கியமான விசேஷங்களில் ஒன்றான பவித்ர உற்சவம், இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தரிசன டிக்கெட்டுகள் வரும் மே 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்த உற்சவத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தங்களது தரிசனத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
இந்த பவித்ர உற்சவ டிக்கெட்டின் சிறப்பம்சமே, ஒருமுறை டிக்கெட் எடுத்தால் உற்சவம் நடைபெறும் 3 நாட்களும் தொடர்ந்து ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு கிடைப்பதுதான். பொதுவாக ஒரு டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்ற நிலையில், இந்தச் சிறப்பு டிக்கெட் மூலம் பக்தர்கள் மூன்று நாட்களும் நடைபெறும் ஸ்நபன திருமஞ்சனம் உள்ளிட்ட முக்கிய சடங்குகளில் பங்கேற்று இறைவனை தரிசிக்கலாம். குடும்பத்துடன் செல்லும் பக்தர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.
உலகப்புகழ் பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வெளிநாடுகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் பல மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் சூழல் நிலவுகிறது. இத்தகைய விசேஷ நாட்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பக்தர்கள் மே 21-ஆம் தேதி டிக்கெட் வெளியான சில நிமிடங்களிலேயே முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது.
தமிழகம் முழுவதும் இன்று (நவம்பர் 6) அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
ட்விஷா ஷர்மா மரண வழக்கில் முக்கியக் குற்றம் சாட்டப்பட்டவரான கிரிபாலா சிங்கின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கேள்விப்பட்டிராத 'குதிரை பேரம்' என்ற சொல், தற்போது பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்து அரசியல் சூட்டை அதிகரிக்கச்…
தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்களுக்கு அரசு சமீபத்தில் அறிவித்த அகவிலைப்படி உயர்வுத் தொகை, தற்போது ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக…
ரஷியாவின் வதுலினோ விமான நிலையத்தில் நடைபெற்ற ‘விா்போர்ட் ஃபோர்சஸ் டே’ கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. சோவியத்…
தென் கிழக்கு வங்கக்கடலில் வரும் நவம்பர் 13-ஆம் தேதி புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம்…