தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் மனோபாலா. திருவாரூர் அருகே நல்லிணத்தை பூர்வீகமாக கொண்ட மனோபாலா சிறுவயது முதலை சினிமா மீது தீராத காதல் கொண்டிருந்ததால் கல்லூரி படிப்பை முடித்த உடனே வீட்டில் கூட சொல்லிக் கொள்ளாமல் ரயில் ஏறி சென்னைக்கு கிளம்பினார். இங்கு வந்து தனது அக்காவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தங்கி படங்கள் பார்ப்பதை வேலையாகவும் சினிமாவில் உதவி இயக்குனராக சேருவதை இலக்காகவும் கொண்டு செயல்பட்டார். பிறகு ஒரு பத்திரிக்கையாளராக தனது பணியை தொடங்கிய மனோபாலாவிற்கு நடிகர் கமல்ஹாசனின் நட்பு கிடைத்தது.
அதன் மூலம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். உதவி இயக்குனராக புதிய வார்ப்புகள் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மனோபாலா, நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், டிக் டிக் டிக், நிழல்கள் மற்றும் அலைகள் ஓய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் பாரதிராஜாவிடம் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ஆகாய கங்கை என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து படங்களிலும் நடிக்க தொடங்கினார். ரஜினி மற்றும் கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் மனோபாலா சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து பிறகு பல திரைப்படங்களிலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.
ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் இயக்குனராகவும் தனது சினிமா வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருந்த மனோபாலா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்ரீவித்யா குறித்து மனோபாலா அளித்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “ஊரெல்லாம் கொண்டாட கூடிய ஒரு நடிகை கேரளாவில் போயா சாக வேண்டும். ஒரு நாள் என்னிடம் போன் பண்ணி நீ என்னை பார்த்தாய் என்றால் வாழ்க்கையை வெறுத்து விடுவாய்.
நான் இப்பொழுது வேறு மாதிரி இருக்கிறேன். யாரையாவது பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்போது ஒரு நடிகரின் பெயரை சொன்னார் .அதன் பிறகு இல்ல இல்ல நான் அவரிடம் சொல்ல தயாராக இல்லை. என்னை அவர் பார்க்காமல் இருந்தால் கூட பரவாயில்லை என்றார். என்னை விட்டு எல்லாருமே போயிட்டாங்க நான் அனாதையா என்று சொன்னார் அப்பொழுது நான் அரசாங்கமே உனக்கு துணை நிற்கிறது. நீ அவ்வளவு பெரிய ஹீரோயின் என்றேன். அதேபோல அவர் செத்த பிறகு திருவனந்தபுரத்தில் ராணுவ மரியாதை கொடுத்து அடக்கம் செய்தார்கள்” என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும்…
தானேயில் உள்ள டீன் ஹாத் நாகா அருகே தவறான பாதையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், காரில் பயணித்த…
தமிழக அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்…
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வி.எஸ்.பாபு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகவுள்ள நிலையில், அவரது உடல்நிலை…
தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…
இண்டியா கூட்டணி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகள் முதன்முறையாகப் பங்கேற்ற நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ள…