இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள வங்கிகளுக்கு அரசு சார்பில் பொது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதைத் தாண்டி வார விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்கள் என அடுத்தடுத்த வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் (அக்டோபர் 5, 12, 19, 26) விடுமுறையாகும்.
அதனைப் போல இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் (அக்டோபர் 11, 25) வங்கிகள் செயல்படாது. இதனைத் தவிர்த்து அக்டோபர் 2 விஜயதசமி மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறை. அடுத்து அக்டோபர் 20 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்று விடுமுறை வருவதால் வங்கிகள் இயங்காது. இதனால் தமிழகத்தில் மொத்தம் எட்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இதற்கு ஏற்ப கடன் தவணை செலுத்துதல், காசோலை தொடர்பான பணிகளை முன்கூட்டியே முடித்துக் கொள்வது நல்லது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…