“எள்ளுவய பூக்கலயே, மூன்று முறை முதல்வர்.. இன்று தனிமரம்”…. ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் அஸ்தமிக்கிறதா?…. ஷாக் ரிப்போர்ட்….!

Spread the love

அதிமுக ஆட்சிக் காலத்தில் மூன்று முறை தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது அரசியல் ரீதியாகத் தனித்துவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியில், இறுதியாகக் கட்சி மற்றும் சின்னம் அனைத்தும் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குச் சென்றது. கட்சிக்குத் துரோகம் செய்ததாகக் கூறி ஓபிஎஸ் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். இதன் காரணமாக, அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்குடன் இருந்த அவரது மவுசு தற்போது பெருமளவு குறைந்துள்ளது.

தனது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கவும், மீண்டும் அதிமுகவில் இணையவும் ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, பாஜக மேலிடம் மற்றும் டிடிவி தினகரன் மூலம் சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்திப் பார்த்தார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், அந்தக் கூட்டணிக்குள்ளாவது நுழைந்துவிட வேண்டும் என்ற ஓபிஎஸ்ஸின் முயற்சிக்கும் எடப்பாடி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தற்போதைய சூழலில், பாஜக மற்றும் டிடிவி தினகரன் தரப்பு ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்க்க அழுத்தம் கொடுத்தாலும், எடப்பாடி பழனிசாமி அதனை ஏற்க மறுப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு ஏற்படாவிட்டால், கடந்த தேர்தலைப் போலவே வரவிருக்கும் 2026 தேர்தலிலும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சையாகப் போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார். செல்வாக்குமிக்க தலைவராகத் திகழ்ந்த ஒருவர், இன்று அரசியல் களத்தில் ஆதரவின்றித் தனித்துவிடப்பட்டிருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

15 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

24 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

37 minutes ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

38 minutes ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

42 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

45 minutes ago