புத்தாண்டை வரவேற்பதற்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில் உணவு பிரியர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 31ஆம் தேதி இன்று நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஆன்லைன் டெலிவரி சேவைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக ஸ்விக்கி, zomato, உள்ளிட்ட உடனடி டெலிவரி சேவைகள் அனைத்தும் முழுமையாக அல்லது பகுதி அளவில் நிறுத்தப்படலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. இதனால் வீட்டிலேயே பார்ட்டி நடத்த திட்டமிட்டுள்ள பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் டெலிவரி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் தான் இதற்கு காரணம். டிசம்பர் 25ஆம் தேதி ஒரு கட்டமாக போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று இதை மேலும் தீவிர படுத்த திட்டமிட்டுள்ளனர். ஸ்விக்கி, சோமாட்டோ, செப்டோ, பிளிங்கிட், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள், தங்களின் வேலைச் சூழல் மற்றும் ஊதிய முறைகளுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஊதிய உயர்வு கோரி இந்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ள நிலையில் இந்த நிறுவனங்களின் டெலிவரி சேவை முடங்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் மூலம் வெளிப்படையான, நியாயமான ஊதிய முறை, 10 நிமிட டெலிவரி போன்ற ஆபத்தான நடைமுறைகளை ரத்து செய்தல், காரணமில்லாத ஐடி பிளாக் செய்தல், அபராத விதிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ உலகளவில் வெளியாகிக் திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், திரையரங்கில் படத்தைப் பார்த்த தவெக…
தமிழ்நாட்டில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வரும் நிலையில், தினமும் பல நூறு கோடி…
தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், தமிழக வெற்றி கழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து…
ரயில் தண்டவாளத்தில் தற்செயலாக விழுந்த சிறு குழந்தையைக் காப்பாற்ற, தந்தை ஒருவர் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த நொடியே…
தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்த அதன் தலைவரும் முதல்வருமான விஜய் தீவிர நடவடிக்கைகளை…
துருக்கியின் அங்காரா நகரில் வசித்து வரும் டெரின் டெனிஸ் என்ற பெண், கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனது கணவரால் கொடூரமான…