மேற்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில், வீட்டு உபயோக எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் அளவைக் குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ சிலிண்டர்களுக்குப் பதிலாக, தற்காலிகமாக 10 கிலோ எரிவாயு மட்டும் நிரப்பப்பட்ட சிலிண்டர்களை விநியோகிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. குறைந்த அளவில் உள்ள எரிவாயு கையிருப்பை வைத்து, கூடுதலான குடும்பங்களுக்குத் தடையின்றி சிலிண்டர்களைப் பகிர்ந்து வழங்குவதே இந்த அதிரடி மாற்றத்தின் பின்னணியில் உள்ள முக்கிய நோக்கமாகும்.
எண்ணெய் நிறுவனங்களின் கணிப்புப்படி, 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு சுமார் 40 நாட்கள் வரை வரும் நிலையில், 10 கிலோ சிலிண்டர் ஒரு மாத காலத்திற்குப் போதுமானதாக இருக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் விநியோகச் சங்கிலியில் ஏற்படும் தொய்வைத் தவிர்த்து, நெருக்கடியான நேரத்திலும் அனைத்து வீடுகளுக்கும் எரிவாயு கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என அரசு கணக்கிட்டுள்ளது. இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா, தற்போதைய சூழல் கவலைக்கிடமாக இருப்பதாக எச்சரித்திருந்தாலும், வீடுகளுக்கான விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்யத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…