Categories: சினிமா

‘நிக்சன் என்கிட்டே Sorry கேட்கவே இல்ல.. எல்லாமே பொய்… கமல் சார் தான் இத கேக்கணும்’.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் வினுஷா..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் பெரும் ஆரவாரத்துடன் துவங்கிய தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.  துவங்கியது. இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் களமிறக்கப்பட்டனர். ஆக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 40 நாட்களை நிறைவு செய்துள்ளது.

இந்த 18 போட்டியாளர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், பிரதீப் , அன்னபாரதி என 7 போட்டியாளர்கள் இதுவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இவர்களில் கடந்த சனிக்கிழமை போட்டியாளர் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி ரெட் கார்டு கொடுத்து கமலஹாசனால் வெளியேற்றப்பட்டார். இதற்கு தற்பொழுது வரை  பிரபலங்களும், ரசிகர்களும்  தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதல் சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் நிக்சன். இவர் ஐஷுவிடம் அவ்வப்பொழுது எல்லை மீறிய செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட குறுக்கே கண்ணாடி இருக்க இருவரும் மாறி மாறி முத்தம் குடுத்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி படுவைரலானது. இதைத்தொடர்ந்து ஐஷு கட்டடியிருந்த வேட்டியை சரிசெய்ய வேட்டியினுள் கையை விட்டார். இப்படி எல்லை மீறி நடந்து கொண்டு வருகிறார் நிக்சன்.

இவர் ஏற்கனவே வினுஷாவை body shaming செய்து ஐஷுவிடம் பேசியிருந்தார். நேற்று பிக் பாஸ் அனைவர் முன்னிலையிலும் அவரை நன்றாக மாட்டிவிட்டார். அதாவது நேற்று டாஸ்க்கில் ‘இந்த வீட்டில் உள்ள நபர்கள் சொன்ன கமெண்டுகள் காட்டப்படும். அதை சொன்ன நபர்கள் ஏன் சொன்னார்கள்? என்பதை விளக்க வேண்டும்’ என கொடுக்கப்பட்டது. அப்போது, ‘வினுஷா வேலைக்காரி. அவ என்னோட டைப் இல்ல. ஒரு ஒருத்தங்களுக்கு ஏதாவது ஒன்னு அட்ராக்ட் ஆக வேண்டும். எனக்கு வந்து உடலழகு சரியாக இருக்க வேண்டும். வினுஷா தேவிக்கு மண்ட மட்டும் குட்டியா இருக்கு. அவங்க கண்ணு அழகா இருக்கு. ட்ரெஸ் போட்டா பெர்ஃபெக்டா இருக்கு. அது ஓகே. பூர்ணிமா அக்கா அழகா இருக்காங்க. அந்த மாதிரி பெர்ஃபெக்டா இருக்கணும்’ என்ற கமெண்ட் டிவியில் காட்டப்பட்டது.

இதற்கு விளக்கமளித்த நிக்ஸன், ‘தான் தப்பான அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும், நம்புகிறவர்கள் நம்புங்கள். அதற்காக வினுஷாவிடம் மன்னிப்பும் கேட்டேன்’ என கூறியிருந்தார். இந்த நிலையில் உண்மையில்  என்ன நடந்தது என்பது பற்றி வினுஷா தேவி தற்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘நான் இப்போது பிக்பாஸ் உள்ளே இல்லை என்றாலும் நிக்ஸன் விவகாரத்தை பற்றி பேசவும், எனக்காக நிற்கவும் விரும்புகிறேன். முதல் வாரத்தில், நிக்ஸனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. நான் அவரை ஒரு சகோதரனாக உண்மையாகவே கருதினேன். நான் அவரிடம் அப்படித்தான் நடந்து கொண்டேன்.

ஆரம்பத்தில் நிக்ஸன் எப்போதும் என்னை செய்யத் தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல நிக்ஸன் தன் எல்லைகளைக் கடக்கத் தொடங்கினார். மேலும் அவரது நடவடிக்கைகள் என்னைக் காயப்படுத்தியதால் ட்ரோல் செய்வதை நிறுத்தும்படி அவரிடம் சொன்னேன். இந்த ட்ரோல் சம்பவதுக்காக மட்டுமே ஒரு நாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் என்னை உருவக்கேலி செய்ததற்கு எல்லாம் நிக்ஸன் மன்னிப்பு கேட்கவில்லை.  கமல் சார் இந்த விஷயத்தை பற்றி பேசுவார் என நம்புகிறேன்.’ என்று கூறியுள்ளார். இதோ அவரின் பதிவு…

Begam

Recent Posts

பள்ளி செல்ல தயாராக இருந்த 6 வயது மகன்… மாமியாருடன் ஏற்பட்ட சண்டையில்.. தாயே கொலை செய்த கொடூரம்.. உ.பியில் பயங்கரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில் ஒரு துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சிங் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

பெங்களூருவில் அதிர்ச்சி: ஏசி (AC) ஆன் செய்யச் சொன்ன பெண் பயணிக்குக் கொலை மிரட்டல் விடுத்த கேப் டிரைவர்..!!

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண், சமீபத்தில் தனது கேப் பயணத்தின் போது ஏற்பட்ட மிகவும் பாதுகாப்பற்ற மற்றும் பயமுறுத்தும் அனுபவத்தை…

4 மணத்தியாலங்கள் ago

கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லனா வீட்டை விட்டு போ..! 25 வயசானாலே கல்யாணம் தானா..? 25 வயதுப் பெண்ணின் குமுறல்: இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப்…

4 மணத்தியாலங்கள் ago

“டேய் என்னடா இப்படி பண்ணிட்டியே” 12 வயது மகனை ஆபீஸுக்கு கூட்டிப்போன தந்தை… கொஞ்ச நேரத்தில் அலுவலகமே எரிந்து சாம்பல்..!!

சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை…

4 மணத்தியாலங்கள் ago

“ஒரு சின்ன ஓட்டைக்கு 21 ஆயிரம் ரூபாயா?” பிளம்பர் கூலியைக் கேட்டு அலறிய இந்தியப் பெண்.. அமெரிக்காவில் இந்தியப் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், தனது வீட்டில் ஏற்பட்ட ஒரு சிறிய குழாய் கசிவை (Pipe leak) சரிசெய்ய…

5 மணத்தியாலங்கள் ago

மகளிருக்கு குட் நியூஸ்.. ரூ.1000 வழக்கம்போல கிடைக்கும்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

தமிழகத்தில் தவெக அரசு 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' மூலம் மகளிருக்கான மாதாந்திர உரிமைத்தொகையை ₹2,500 ஆக உயர்த்தி, அடுத்த 6…

5 மணத்தியாலங்கள் ago