முதல்வர் பதவியை திடீர் ராஜினாமா செய்யும் நிதிஷ்குமார்..? பீகார் அரசியலில் பரபரப்பு…!!

Spread the love

பீகார் அரசியலில் பெரும் மாற்றமாக, முதல்வர் நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் 16, 2026 அன்று நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் (Rajya Sabha) போட்டியிடுவதற்காக, அவர் இன்று (மார்ச் 5) தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார். 10 முறை முதல்வராகப் பதவியேற்றுச் சாதனை படைத்த 75 வயதான நிதிஷ்குமார், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணங்களால் மாநில அரசியலில் இருந்து விலகி தேசிய அரசியலில் கவனம் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, பீகாரின் அடுத்த முதல்வராகப் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், நிதிஷ்குமாரின் மகனும் பொறியியல் பட்டதாரியுமான நிஷாந்த் குமார், துணை முதல்வராகப் பொறுப்பேற்று நேரடி அரசியலில் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பாட்னா வரவுள்ள நிலையில், இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த இறுதி முடிவு இன்று மாலைக்குள் வெளியாகும் எனத் தெரிகிறது.

Soundarya

Recent Posts

எந்த பிரச்சனையும் இல்லை!… மனநல பாதிப்பா? வேறு ஏதேனும் காரணமா?… தாய், 18 மாத குழந்தையின் மர்ம மரணத்தில் திருப்பம்…!!

சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…

4 minutes ago

“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…

11 minutes ago

திகில் நிமிடங்கள்!… TV பார்த்து கொண்டிருந்த தம்பதி… நொடியில் வீட்டுக்குள் புகுந்த எமன்… கடைசியில் பெண் செய்த அந்த செயல்… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!!

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…

18 minutes ago

இனி நடக்காது!… NRI கணவர்களுக்கு அதிர்ச்சி… இந்தியாவில் கல்யாணம், வெளிநாட்டில் விவாகரத்தா?… முதல் மனைவியின் புகாரால் சிக்கிய நபர்… உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…

27 minutes ago

BREAKING: நகைப் பிரியர்களுக்கு ஜாக்பாட்… 4 நாட்களில் ரூ.4,500 குறைந்த தங்கம்… இன்றைய சவரன் விலை என்ன தெரியுமா?…!!

உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…

35 minutes ago

“உயிருடன் திரும்பி வருவாரா?”… திடீரென பாய்ந்த காட்டாற்று வெள்ளம்… அருவியில் நடந்த கோரம்… தமிழக இளைஞர் நிலை என்ன?…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…

43 minutes ago