தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் மணிகண்டன் (29) என்பவர் பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தன்னுடன் வேலை செய்து வந்த சுபலட்சுமி (25) என்ற பெண்ணை அவர் காதலித்து வந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இரு வீட்டிலும் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குட்ட காட்டு புதூரில் உள்ள சுபலட்சுமி யின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்தனர். இப்படியான நிலையில் மேனகா அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டார்.
வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து தன்னுடைய மனைவியை சாப்பிட கூறியுள்ளார். அவர் தனது சகோதரி கோவிலுக்கு சென்று விட்டதால் வீட்டில் சிக்கன் சாப்பிட மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்தில் உள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் எடுக்கப்பட்ட ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக…
தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 உதவித்தொகை வழங்கும் தேர்தல் வாக்குறுதியை விரைவில் செயல்படுத்துமாறு முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக…
உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டம், யமுனாநகர் மண்டலத்திலுள்ள மேஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலுவா கிராமத்தில், டோன்ஸ் ஆற்றில்…
தமிழகத்தில் நலிவடைந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மின்சார (EV) ஆட்டோ வாங்குவதற்காக ₹3 லட்சம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த செய்தி தனக்கு மிகுந்த…
திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் விநோதமான…