டாஸ்மாக் பார் உரிமம் அளித்தல், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர்கள் ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. அமைச்சராக இருந்த காலத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாக லாபம் ஈட்டியதாகவும், அரசின் கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து, டாஸ்மாக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான விசாகன் IAS, மண்டல மேலாளர்கள் மற்றும் செந்தில் பாலாஜியின் உதவியாளர்களான பாஸ்கர், ரதீஷ் ராஜ் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளும் அதிகார மையமும் இணைந்து செயல்பட்ட இந்த முறைகேடு தொடர்பான விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ளது.
மாமல்லபுரம் அடுத்த பையனூர் ஓஎம்ஆர் சாலையில் நிகழ்ந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக வந்த வேனும்,…
வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம்…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…
பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…