தமிழக அரசுப் பேருந்துகளில் அதிகரித்து வரும் விபத்துகளைத் தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்துத் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, பேருந்தை இயக்கும்போது ஓட்டுநர்கள் எக்காரணம் கொண்டும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு கையில் செல்போன் பேசிக்கொண்டு பேருந்தை ஓட்டுவதால் ஏற்படும் கவனச்சிதறலே பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைவதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. விதியை மீறும் ஓட்டுநர்கள் மீது 29 நாட்கள் கட்டாயப் பணியிடை நீக்கம் போன்ற கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை உறுதிப்படுத்த, மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இனி ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்பியவுடன் தங்களது செல்போன்களை சக நடத்துநரிடம் ஒப்படைக்க வேண்டும். பணி நேரம் முடியும் வரை செல்போன் நடத்துநரிடமே இருக்க வேண்டும்;
அதன் பிறகே ஓட்டுநர்கள் அதனைப் பெற்றுச் செல்ல முடியும். பேருந்துகளில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் மூலம் இந்த விதிகள் தீவிரமாகத் கண்காணிக்கப்படும். விபத்து இல்லாத பயணத்தை உறுதி செய்ய அரசு மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றத்திற்குப் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…