தற்போது ஸ்மார்ட் போன்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் சமூக வலைதளங்களில் இளைய தலைமுறையினர் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். Whatsapp, facebook உள்ளிட்ட சமூக வலைதளங்களை விட இன்ஸ்டாகிராம் தான் அதிக அளவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவிற்கு அனைவரும் மத்தியில் இன்ஸ்டா ரீல்ஸ் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 43 கோடிக்கு அதிகமானவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் இன்ஸ்டாவில் புது புது அப்டேட்களை மீட்ட நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது இன்ஸ்டாவில் உள்ள லைவ் வசதியை இனி அனைவரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சில விதிமுறைகளை மாற்றி இருக்கிறது. இனிமேல் குறைந்தபட்சம் ஆயிரம் பின் தொடர்பவர்களைக் கொண்ட பொது கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே லைவ் வீடியோக்களை வெளியிட முடியும். தற்போது வரை எந்த ஒரு பயனரும் லைவ் வசதியை பயன்படுத்தும் அம்சத்தை இன்ஸ்டாகிராம் அனுமதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…