தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட உள்ளன. அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, அனைத்து நலத்திட்டப் பயனாளிகளின் தரவுகளையும் ஆதார் எண்ணுடன் ஒருங்கிணைத்துள்ளதால், இனி ஒரு நபர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அரசு உதவித்தொகை திட்டங்களில் பலன் பெற முடியாது என்பது உறுதி செய்யப்பட உள்ளது.
இது குறிப்பாக, முதியோர் ஓய்வூதியம் அல்லது வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை போன்ற பணப்பலன் தரும் இதர திட்டங்களில் பயனாளிகளாக இருப்பவர்கள், மகளிர் உரிமைத்தொகைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள். தரவு சரிபார்ப்பின் போது இத்தகைய இரட்டைப் பலன்கள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் உரிமைத்தொகை உடனடியாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பிக்கக் காத்திருக்கும் பெண்கள், இதற்கான தகுதி வரம்புகளைச் சரியாகப் பூர்த்தி செய்துள்ளனரா என்பதை உறுதி செய்வது அவசியம். வருமான வரி செலுத்துபவர்கள் அல்லது தொழில் கடன் பெறுவதற்காக வருமான வரி கணக்கு தாக்கல் செய்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்காது.
மேலும் ஆதார் அடிப்படையிலான புதிய சரிபார்ப்பு முறையினால் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டு, தகுதியுள்ள ஏழை பெண்களுக்கு மட்டுமே அரசின் நிதி சென்றடைவதை உறுதி செய்ய தமிழக அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்கும் முன்னர் அனைத்து விதிமுறைகளையும் முறையாகக் கவனித்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…