தமிழகத்தில் இயங்கி வரும் 150 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் யூனிட் அலுவலகங்களில் தினம் தோறும் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றில் சொந்த பயன்பாட்டுக்கான வாகனங்கள் மட்டுமே 4000 வரை உள்ளது. இதுவரை புதிய வாகனங்களை பதிவு செய்யும்போது அந்த வாகனத்தை உரிமையாளர் அல்லது விற்பனை பிரதிநிதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் டீலர்கள் இதற்காக தனி கட்டணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின்படி சொந்த பயன்பாட்டு வாகனங்கள் பதிவு செய்யும்போது அவற்றை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டுவர தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் இந்த சலுகை தமிழகத்தில் அமல்படுத்தப்படாமல் இருந்த நிலையில் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை தொடர்ந்த சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட புதிய வாகனங்களை பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வர வேண்டாம். இந்த உத்தரவை டிசம்பர் 1 நாளை முதல் அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…