தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நியூஸ்18 நிறுவனம் நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, வருகின்ற சட்டசபைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணி 35.8 சதவீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணி 33.8 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 19.2 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது முக்கிய சக்தியாக உருவெடுக்கும் என்றும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு 33.3 சதவீத மக்களும், எடப்பாடி பழனிசாமிக்கு 29.8 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அரசியலில் புதிய வரவான விஜய்க்கு 23.2 சதவீத மக்கள் முதல்வராக ஆதரவு அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் மற்றும் இதர வேட்பாளர்கள் 6.5 சதவீத வாக்குகளைப் பெறுவார்கள் என்றும், சுமார் 4.7 சதவீத வாக்குகள் இன்னும் கணிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவுகள் கடந்த ஜனவரி மாதம் சாணக்யா அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பிலிருந்து மாறுபட்டுள்ளன. சாணக்யாவின் ஆய்வில் எடப்பாடி பழனிசாமிக்கு 37 சதவீதமும், மு.க. ஸ்டாலினுக்கு 33 சதவீதமும் ஆதரவு இருந்த நிலையில், தற்போது நியூஸ்18 முடிவுகள் திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளின் ஆதரவு தளம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. தமிழகத்தில் மும்முனைப் போட்டி வலுவடைந்து வரும் நிலையில், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வரவிருக்கும் தேர்தல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…