தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ₹3,000 ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளும் வழங்கப்படுகின்றன. தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் இந்த அரசு அறிவித்த பொங்கல் பரிசுகளைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைகள் குறித்து அமைச்சர் ஆர். காந்தி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன்படி, பெண்களுக்கு 15 வகையான நவீன வடிவமைப்புகளில் (Designs) சேலைகளும், ஆண்களுக்கு 4 வெவ்வேறு நிற பார்டர்களுடன் கூடிய வேட்டிகளும் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான வண்ணம் மற்றும் வடிவமைப்பைத் தேர்ந்தெடுத்துக் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…