#image_title
நடிகர் ஜெய் ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர். தனது இன்னசெண்ட் கதாபாத்திரங்கள் மூலம் பெண்கள் ரசிகர்களை கட்டிப் போட்டவர். எங்கேயும் எப்போதும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடிகை அஞ்சலியுடன் ஒன்றாக நடித்திருந்தார்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், பிறகு ஏற்பட்ட சில மன கசப்பு காரணமாக பிரிந்துவிட்டதாகவும் தகவல்கள் பரவின. இதனைத் தொடர்ந்து, நடிகை வாணி போஜன் மற்றும் ஜெய் இருவரும் இணைந்து ஒன்றாக வெப் சீரிஸில் ஒன்றில் இணைந்து நடித்திருந்தார்கள்.
இதனால், இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. தற்பொழுது நடிகர் நடிகர் ஜெய்யின் ரசிகர்கள் இவரது திருமண அறிவிப்பை எதிர்ப்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்பொழுது பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார் நடிகர் ஜெய்.
இந்நிலையில் நடிகர் ஜெய் , நடிகை பிரக்யா நக்ரா உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை பிரக்யா நக்ராவின் கழுத்தில் தாலி தொங்குகிறது. இப்புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து ‘புது வாழ்க்கை ஆரம்பம் . கடவுள் ஆசிர்வாதத்துடன்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ‘ உண்மையாகவே இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதா..? இல்லை இது ஷூட்டிங் ஸ்பாட்டா..? என்று குழப்பத்தில் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்…
பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…
பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…
ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…
“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…
பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…
சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…