முதலிரவு அறையில் தாம்பத்ய உறவுக்கு மறுத்த புதுப்பெண்… துடியாய் துடித்த வாலிபர்… இறுதியில் நடந்த திடுக்கிடும் சம்பவம்…!

Spread the love

சென்னை புரசைவாக்கம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்த அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவருக்கும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமண தகவல் மையம் மூலமாக இருவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் திருமணம் முடிந்து ஆசை கனவுகளுடன் புதுப்பெண் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நவம்பர் 24ஆம் தேதி முதல் இரவு நடந்த நிலையில் அறைக்குள் நுழைந்ததும் புது மாப்பிள்ளை அகஸ்டின் ஜோஸ்வா தாம்பத்திய உறவுக்கு துடித்ததாக தெரிகிறது. ஆனால் புது பெண் தாம்பத்ய உறவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

முதல் இரண்டு நாட்கள் இருவரும் மனம் விட்டு பேசுவோம், பிறகு உறவை தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு புது மாப்பிள்ளை சமாதிக்கவில்லை. உடனடியாக உறவை தொடங்க வேண்டும் என்று துடித்துள்ளார். புதுப்பெண் தற்போது உறவு வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்ததால் ஆத்திரமடைந்த அகஸ்டின் ஜோஸ்வா அறையில் இருந்த சுத்தியலை எடுத்து புதுப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் அவரின் கை கால்கள் மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டுள்ளது. முதலிரவு அறைக்குள் கூச்சல் போட்டபடியே புதுப்பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அகஸ்டின் ஜோஸ்வா புது பெண்ணை அரைக்குள் போட்டு வெளியில் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

மயக்கமடைந்த புதுப்பெண் இரவு முழுவதும் முதலிரவு அறையிலேயே சிறை வைத்தது போல கிடந்துள்ளார். மறுநாள் காலையில் தான் உறவினர்கள் முதல் இரவு அறையைத் திறந்து பெண்ணை மீட்டு உள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதுப் பெண் மீது தாக்குதல் நடத்திய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அவரை கைது செய்துள்ளனர். மேலும் புது பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திருமண தகவல் மையம் மூலம் இரு தரப்பினரும் பேசிதான் திருமணம் முடிவு செய்தோம். திருமணத்தின் போது அகஸ்டின் ஜோஸ்வா தன்னை பெரிய வசதி படைத்தவன் என்று கூறினார்.

வரதட்சணையாக நகைகள் எதுவும் வேண்டாம் என்று கூறினார். நானும் அவர் நல்ல கணவராக இருப்பார் என்று நம்பி கழுத்தை நீட்டினேன். தாலி கட்டி அவருடைய வீட்டுக்கு வந்தவுடன் தான் அவர் ஏற்கனவே இரண்டு பெண்களோடு தொடர்பில் இருந்தது தெரியவந்தது. திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணிடமும் அவருக்கு ரகசிய உறவு இருந்ததாக கூறினார்கள். ஆனால் அதனை பொருட்படுத்தாமல் நான் அவரோடு நல்லபடியாக வாழ வேண்டும் என்று நினைத்தேன். அவர் என்னிடம் மனம் விட்டு பேசாமல் என்னோடு உறவு வைப்பதில் மட்டுமே குறியாக இருந்தார். அது எனக்கு பிடிக்கவில்லை. திடீரென்று எதிர்பாராத விதமாக என் மீது தாக்குதல் நடந்தது. நல்லவேளை நான் உயிர் பிழைத்தேன். இனிமேல் அவருடன் வாழ மாட்டேன் என்று அந்தப் பெண் கூறியுள்ளார்.

Nanthini

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

11 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

11 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

12 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

12 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

12 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

12 மணத்தியாலங்கள் ago