தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இருந்த ‘தமிழர் தேசம் கட்சி’ திடீரென அக்கூட்டணியில் இருந்து விலகி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளது. நாளை என்டிஏ கூட்டணியின் முக்கிய பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் செல்வக்குமார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கான காரணங்களை விளக்கிய செல்வக்குமார், தமிழக பாஜகவினர் தங்களுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதத்திற்கு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த தங்கள் கட்சி முக்கிய பங்காற்றியதாகவும், ஆனால் தற்போது பாஜக தலைவர்கள் தங்கள் அழைப்புகளைக் கூட முறையாக ஏற்பதில்லை என்றும் அவர் வேதனையோடு தெரிவித்துள்ளார். மேலும், மீனவர் நல வாரியம் அமைப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திடீர் அரசியல் மாற்றம் வரவிருக்கும் தேர்தலில் முத்தரையர் சமூக வாக்கு வங்கியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 25-ம் தேதி தமிழர் தேசம் கட்சி நடத்தவுள்ள ‘அரசியல் அதிகார மீட்பு மாநாட்டிற்கு’ முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்துள்ள செல்வக்குமார், வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட சில தொகுதிகளைக் கோரியுள்ளதாகவும், அதற்கு திமுக தலைமை சாதகமான உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கூட்டணியில் விழுந்த இந்த முதல் விக்கெட் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…