#image_title
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. 20 வருடங்களாக தொடர்ந்து சினிமாவில் இருந்து வரும் இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன் இணைந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நயன்தாராவின் சினிமா கேரியரை இரண்டாகப் பிரிக்கலாம். சிம்பு மற்றும் பிரபுதேவா ஆகியோருடனான காதலுக்குப் பிறகு சினிமா வேண்டாம் என மும்பையில் தங்கியிருந்த அவருக்கு ராஜா ராணி படம் கம்பேக்காக அமைந்தது. அதன் பின்னர் பல வெற்றிப் படங்களில் நடித்த அவர் மாயா மற்றும் அறம் ஆகிய படங்களின் மூலம் தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கிக் கொண்டு லேடி சூப்பர் ஸ்டார் ஆனார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். நயன்தாரா படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவரின் சமீபத்தைய படங்கள் எதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் ஒரு ஹிட் படத்துக்காகக் காத்திருக்கிறார்.
#image_title
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு அழகு சாதனப் பொருள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். அதன் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நயன்தாரா தான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேனா என்பது குறித்து பேசியுள்ளார்.
அதில் “நான் வெளி நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது என் கண் புருவங்களை திருத்திக் கொள்வேன். அதற்காக அதிக நேரத்தை செலவிடுவேன். அதுதான் என் முகத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரிந்திருக்கலாம். மற்றபடி நான் என் கன்னத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்துகொள்ளவில்லை. பலவகை டயட்கள் மூலமாக நான் என்னுடைய கன்னத்தின் அமைப்பை மாற்றியிருக்கிறேன். வேண்டுமானால் நீங்கள் என் கன்னத்தை கிள்ளிப் பார்த்துக் கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளதை திமுக கடுமையாகச்…
தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவித இடையூறும் செய்யாது என முதலமைச்சர்…
தமிழக சட்டசபை தேர்தலில் முதல் முறையாகக் களம் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில்…
தமிழக அரசியலில் தவெக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை இழுபறி நீடிக்கும் சூழலில், அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும்…
தமிழக அரசியலில் பரம எதிரிகளாகக் கருதப்படும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை…