தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகை நயன்தாரா ஏற்கனவே Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்பொழுது தனது அழகு சாதன பிஸ்னஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சரும பிராடக்டுகளில் இறங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் 9skin என்ற அடுத்த நிறுவனத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார். இதில் சருமத்திற்கு தேவையான அழுகு சாதன பொருட்களை விற்பனை செய்ய இருப்பதாகவும், மேலும், இந்த நிறுவனத்தை வரும் 29ஆம் தேதி துவங்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது தங்களது புது பிஸினஸுக்கான வேலைகளில் விக்னேஷ் சிவன் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதன் முதற்கட்டமாக இவர் ‘the divine foods’ என்ற நிறுவனத்துடன் இணைந்துள்ளார். மேலும் அவர்களுடன் சேர்ந்து கிராமத்திற்கு சென்று ஏழை விவசாயிகளை சந்தித்து, கலந்துரையாடுகிறார். மஞ்சள் சாகுபடி குறித்து கேட்டறிந்த அவர் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விவசாய பொருட்களை வாங்கும் முறை மூலம் தங்களது பிஸினஸுக்கான பொருட்களை வாங்க இருப்பதாகவும் கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…