Categories: சினிமா

தயாரிப்பில் இறங்கி மண்ணை கவ்விய நயன்தாரா.. லேடி சூப்பர்ஸ்டார் தயாரித்து கால்லா கட்டாத 5 படங்கள்..

Spread the love

தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகையாக, கிட்டத்தட்ட 20 வருடங்களை தாண்டி நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகை சினிமாவில் சில காலம் ஹீரோயினாகவும், தனது இரண்டாவது இன்னிங்ஸில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிப்பர். ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை தன்னிடத்தே வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. நடிப்பை தாண்டி பல பிசினஸிலும் ஈடுபட்டு வருகிறார் நயன். லிப்பாம், நாப்கின்ஸ் என ஒரு தொழிலதிபராகவும் தன்னை நிலை நிறுத்த முயற்சித்து வருகிறார் நயன். இதற்கிடையில் இவரும், இவரது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, சிறு சிறு படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

#image_title

அப்படி நயன்தாரா தயாரிப்பில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை அடையாத படங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம். நானும் ரவுடி தான் படத்திலிருந்து நடிகர் தனுஷ் பாதியிலேயே விலக மீதி பணத்தை, நயன் மற்றும் விக்னேஷ் இருவரும் இணைந்து பணம் போட்டு படத்தை முடித்து வெளியிட்டனர். அந்தப் படம் வெற்றி அடைந்தது.

ராக்கி :

ஆனால் அதன் பிறகு நயன் வாங்கி வெளியிட்ட படம் ராக்கி. கேப்டன் மில்லர் பட இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய முதல் படம் இது.
வசந்த் ரவி, ரவீனா ரவி, அனிஷா, ரோகிணி, பாரதிராஜா உட்பட பலர் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

#image_title

கூழாங்கல் :

ஒரு கிராமத்து கதையாக உருவான கூழாங்கல் படத்தை நயன் தயாரித்து இருந்தார். விருதுகளுகாகவே உருவான இப்படம், பல விருதுகளை வாங்கி குவித்தது. அதன் பிறகு ஓடிடியில் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், தயாரிப்பாளராக அவருக்கு லாபத்தை கொடுக்கவில்லை.

கனெக்ட் :

நயன்தாராவின் மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியது கனெக்ட் திரைப்படம். இதனையும் நயன் தயாரித்து, நடித்தும் இருந்தார். ஒரு மணி நேரம் மட்டுமே உருவாகி இருந்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தது.

#image_title

நெற்றிக்கண் :

மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன், அஜ்மல் அமீர், மணிகண்டன் உட்பட பலர் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் நெற்றிக்கண். பார்வையற்ற பெண்ணாக இப்படத்தில் நடித்திருந்த நயனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் இப்படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை.

Archana

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

1 மணத்தியாலம் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

1 மணத்தியாலம் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

1 மணத்தியாலம் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

1 மணத்தியாலம் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

2 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

2 மணத்தியாலங்கள் ago