குஷியோ குஷி…! மாணவர்களுக்கு ரூ.12,000 உதவித்தொகை தரும் அரசு…. விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ….!!

Spread the love

பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய திறமையானவர்களுக்காக மத்திய, மாநில அரசுகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வுத் திட்டத்தை (NMMS) செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற 8ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

8ஆம் வகுப்பில் மாணவர்கள் இடைநிற்றலைத் தடுத்து, உயர்நிலைக் கல்வியைத் தொடர ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 வீதம், ஆண்டுக்கு ரூ.12,000 உதவித் தொகை 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்தத் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.

NMMS தேர்வில் கலந்துகொள்ள, மாணவர்கள் 7ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு 50%). மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.3,50,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த உதவித் தொகைத் திட்டத்தில் பயன்பெற, மாணவர்கள் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 20ஆம் தேதிக்குள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு ஜனவரி 10ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.. பவர்பேங்கால் வந்த வினை.. நடுவானில் அலறிய பயணிகள்.. பெரும் பரபரப்பு..!

டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…

6 மணத்தியாலங்கள் ago

“யாரும் அழக்கூடாது” கொளத்தூரில் ஸ்டாலினை கண்டதும் நடந்த சம்பவம்… பார்த்ததும் கதறிய சேகர் பாபு… வைரலாகும் வீடியோ..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள்..? செங்கோட்டையன் முதல் ராஜ்மோகன் வரை.. லிஸ்டில் இருக்கும் அந்த முக்கிய பெயர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…

7 மணத்தியாலங்கள் ago

நடிகர் ஜீவாவின் தந்தை கார் விபத்தில் சிக்கி உயிரிழப்பு… அதிர்ச்சியில் திரையுலகம்..!!

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…

7 மணத்தியாலங்கள் ago

ஸ்டாலின் தோல்வியால் வருத்தத்தில் விஜய்… ஸ்டாலின் மீது இருக்கும் அந்தப் பாசம்… ஜோதிடர் ரதன் பண்டிட் உடைத்த ரகசியம்..!!!

தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…

7 மணத்தியாலங்கள் ago

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

7 மணத்தியாலங்கள் ago