போனால் போகட்டும் போடா…. “புஷ்பவனம் குப்புசாமிக்கு பதவி”…. கொந்தளித்த நாஞ்சில் சம்பத்… தவெக-வை உலுக்கும் உள்கட்சி மோதல்….!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த நாஞ்சில் சம்பத், கட்சியின் கொள்கைப்பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவர் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மீதும், அவரைச் சுற்றியுள்ள அதிகார மையங்கள் மீதும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், விரைவில் தனது பதவியையும் கட்சியையும் துறக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்ட சில மறைமுகக் கருத்துகளின் அடிப்படையில் இந்த யூகங்கள் இறக்கை கட்டினாலும், அவர் இதுவரை கட்சியிலிருந்து முறைப்படி விலகவில்லை; அது தொடர்பான இறுதி முடிவையும் எடுக்கவில்லை என்பதே தற்போதைய கள நிலவரமாக உள்ளது.

இந்த அதிருப்திக்கு பின்னால் சில முக்கியக் அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தென் மாவட்டங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட நாஞ்சில் சம்பத் விரும்பியதாகவும், ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அப்போது விஜய்யை நேரில் சந்தித்தபோது, “தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்த வேண்டாம்; நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு உரிய உயர்பதவிகள் வழங்கப்படும்” என விஜய் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வாக்குறுதியை நாஞ்சில் சம்பத் பெரிதும் நம்பியிருந்தார்.

இந்நிலையில் தவெக ஆட்சியைப் பிடித்து விஜய் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, சமீபத்தில் பல்வேறு அரசு வாரியப் பதவிகள் நிரப்பப்பட்டு வந்தன. அப்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியை நாஞ்சில் சம்பத் எதிர்பார்த்துள்ளார். தனது விருப்பத்தை முதலமைச்சரின் முக்கிய ஆலோசகர்களிடமும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடமும் அவர் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பதவிக்கு நாட்டுப்புறக் கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத்திற்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே, விஜய்யையும் அவரது ஆலோசகர்களையும் தொடர்பு கொள்ள அவர் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால், ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்த சம்பத் தனது ‘எக்ஸ்’ தளத்தில் “போனால் போகட்டும் போடா” என அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பதவி கிடைக்காதது மட்டுமின்றி, சமீபகாலமாகக் கட்சி நிகழ்ச்சிகளுக்கோ அல்லது இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கோ தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற வருத்தமும் அவருக்குள் புகையத் தொடங்கியுள்ளது. தற்போது பரவி வரும் செய்திகள் குறித்து நாஞ்சில் சம்பத்தின் ஆதரவாளர்களிடம் கேட்டபோது, “இடைத்தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் தலைமை அவரை அழைத்துச் பேசி சமாதானப்படுத்தினால் அவர் அமைதியாகத் தொடர்வார்; இல்லையெனில் தவெகவிலிருந்து விலகுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை” எனக் கூறுகின்றனர். கட்சித் தலைமையின் அடுத்தகட்ட நகர்வைப் பொறுத்தே நாஞ்சில் சம்பத்தின் அரசியல் பயணம் தீர்மானிக்கப்படும் எனத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

அடகடவுளே..! சொந்த மகனே செய்த துரோகம்… 84 வயது தந்தை தற்கொலை… மகள் உடைத்த பகீர் உண்மைகள்… மனதை உலுக்கும் சோகம்…!!

முதியவரான 84 வயது கேப்ரியல் கூட்டின்ஹோவை அவரது சொந்த மகனே கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சிகரமான காணொளி சமீபத்தில் வெளியாகி பெரும்…

3 minutes ago

யார் இந்த மஞ்சுநாத்?… கதறும் அரசுப் பேராசிரியை… தங்கப்பதக்கம் வென்ற பெண்ணின் மரணம்… மாமியார் மீது மருமகன் வெறிச்செயல்…!!

ஓவியம் மற்றும் ஆடை வடிவமைப்பில் பல விருதுகளை வென்ற சரண்யா என்ற பெண், தனது கணவர் மஞ்சுநாத்துடன் ஏற்பட்ட குடும்பத்…

21 minutes ago

“மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?”…. தமிழ்நாட்டில் மீண்டும் வெடித்த மொழிப் போர்… கொந்தளிக்கும் தமிழ் ஆர்வலர்கள்….!

தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்தே ‘இருமொழிக் கொள்கை’ என்பது மாநிலத்தின் மொழி உரிமை சார்ந்த அடிப்படை அடையாளமாகவும், மாநில இறையாண்மையின்…

22 minutes ago

BREAKING: “பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை உடைத்த கோவை பெண்”…. நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் தனுஷ்….!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் தடைகளற்ற ஓட்டப்பந்தயத்தில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும்…

26 minutes ago

10 நாள் மர்மம்… CCTV-யில் சிக்கிய 2 கார்கள்… ஹோட்டல் பழக்கம்… கள்ளக்காதல்… நள்ளிரவு கொலை… காதலனுடன் வாழ கணவனுக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி…!!

தென்காசி மாவட்டம் பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அப்துல்…

28 minutes ago

“கட்சி தாவியவர்களுக்கு இனி ‘கல்தா’?”….. மதுராந்தகம் – தாராபுரம் பாடம்… விஜய் எடுத்த திடீர் முடிவு…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மிக தீவிரமான களம் கண்டு முடிந்துள்ளது. மதுராந்தகத்தில் 85…

32 minutes ago