திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றி கழகம் கட்சியில் நேற்று இணைந்தார். அண்மை காலமாக திமுக மீது அதிருப்தியில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துள்ளது அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்கோட்டையனை தொடர்ந்து நாஞ்சில் சம்பத்தும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து இருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றன. மதிமுக, திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகளில் நாஞ்சில் சம்பத் பயணித்துள்ளார். தற்போது அவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் நேற்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்தை தமிழக முழுவதும் பிரச்சாரம் செய்ய விஜய் அறிவுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவிலான பொதுக்கூட்டங்களை நடத்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்கள் முடிவு எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. பொதுக் கூட்டங்களில் தமிழக வெற்றி கழகம் கொள்கை, விஜய் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்னென்ன செய்வார் மற்றும் திமுக ஆட்சியில் உள்ள குறைபாடுகள் குறித்து நாஞ்சில் சம்பத் பேச உள்ளார் என தெரிகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவரது கூட்டணி…
தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பின் மூலம்…
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும் விதமாக, பெரும்பான்மையை நிரூபித்த விஜய் அவர்களை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்துள்ளார். இதனைத்…
தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் நாளை மதியம் 3:15 மணிக்குத்…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக நடிகர் ஸ்ரீமன் உருக்கமான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், தவெக ஆட்சிக்குத் தனது ஆதரவை வெளியிலிருந்து அளிப்பதாகத் திருமாவளவன் அறிவித்துள்ளார்.…