தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுக்கு நிகரான அளவில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகர்கள் வெகு சிலர்தான். அவர்களின் ஒருவர் டெல்லி கணேஷ். இவர் தவிர்க்க முடியாத நடிகர். வில்லன், காமெடியன், குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அற்புதமாக நடிக்க கூடியவர். இவர் பாலச்சந்திரன் பட்டறையிலிருந்து வந்தவர் .ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என அனைத்து நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரோடும் அசத்தலாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். இவர் 1979 ஆம் வருடம் துறை இயக்கத்தில் வெளியான பசி என்ற படத்தில் முனியாண்டி என்ற ரிக்ஷா டிரைவராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .
அதற்காக அவருக்கு மாநில அரசின் சிறந்த நடிகர் விருது கிடைத்தது. சமீபத்தில் கூட ஒருசில படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு திடீரென்று காலமானார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டெல்லி கணேஷ் மகன், சினிமாவில் வெறும் M. கணேசன் என்று இருந்தால் தெரியாது, அதனால் சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினிகணேசன் என்பது மாதிரி என் பெயருக்கு முன்னாலும் ஏதாவது ஒரு அடையாளம் இருக்க வேண்டும் என்று அப்பா விரும்பியுள்ளார்.
அப்போது நிறைய பெயரை முயற்சி செய்து பார்த்துள்ளனர். திருநெல்வேலியை ஒப்பிட்டு நெல்லை கணேசன் என்று வைக்கலாம் என்று கூறிய போது இல்லை அது அரசியல் சம்பந்தமாக இருக்கிறது அந்த பெயர் வேண்டாம் என்று கூறியுள்ளார். வளநாடு என்பதை வல்லை என்று நாங்கள் சொல்வோம், வல்லை கணேஷ் என்று வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டபோது, படத்துல நடிக்கும் போது பேமெண்ட் வரல வரல என்று அப்ப கூறுவதற்கு பதிலா என் பேருக்கு முன்னாடி அப்படி வைக்கலாம்னு பாக்குறீங்களா அந்த பேர் வேண்டாம் என்று கூறியுள்ளார். பிறகுதான் டெல்லியில் அப்பா நிறைய நாடகங்களை நடித்துள்ளதால் அவருக்கு டெல்லி கணேஷ் என்று பெயர் வைக்கலாம் என இயக்குனர் கே.பாலசந்தர் கூறியதால் பிறகு தான் டெல்லி கணேஷ் என பெயர் வந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…