தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் NDA கூட்டணியில் தற்போது டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இல்லை என்று நயினார் நாகேந்திரன் உறுதிப்பட கூறியுள்ளார். NDA கூட்டணியில் அமமுகவுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக வெளியான தகவலுக்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்திருந்தார். கூட்டணி விவகாரத்தில் அடுத்தடுத்து மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலையில் நயினார் நாகேந்திரன் முதல் முறையாக டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்கள் கூட்டணியில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ள நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்', நீண்டகாலமாக கோலோச்சி வந்த திராவிடக்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026-ஆம் ஆண்டு ஒரு மகத்தான மாற்றத்திற்கான ஆண்டாக உருவெடுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, தமிழக வெற்றிக்…
தமிழக அரசியலில் 2026 தேர்தல் முடிவுகள், எவரும் எதிர்பாராத ஒரு மெகா ‘பிளாக்பஸ்டர்’ திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. கோட்டையை நோக்கி தமிழக…