நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தண்டேல். கடந்த சில நாட்களாக இந்த திரைப்படத்திற்கு பட குழுவினர் தீவிரமாக பிரமோஷனில் ஈடுபட்டு வந்த நிலையில் படம் எப்படி உள்ளது என்பது குறித்த திரை விமர்சனம் வெளியாகி உள்ளது. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இறந்து போன கணவனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து அவருடைய மனைவியாக சாய்பல்லவி நடித்திருந்தார். கிட்டத்தட்ட அதேபோன்று ஒரு வேடத்தை தான் தற்போது தண்டேல் திரைப்படத்திலும் சாய்பல்லவி ஏற்று நடித்துள்ளார்.
சாய்பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீனவ சமுதாயத்தில் வாழ்ந்து நண்பர்களாக தொடங்கி பிறகு காதலர்களாக மாறுகிறார்கள். தனது காதலிக்காக தொழிலை மாற்றிக் கொள்ள நினைக்கும் நாக சைதன்யா இறுதியாக ஒருமுறை மீன்பிடிக்க செல்லும் போது பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிக்கிக் கொள்கின்றார். பாகிஸ்தான் சிறையில் இருந்து அவரை மீட்க காதலில் சாய்பல்லவியின் போராட்டம் தான் இந்த திரைப்படத்தின் கதை. மற்ற படங்களைப் போல சாய்பல்லவி தன்னுடைய நடிப்பில் கவனம் கொடுத்து நடித்துள்ளதால் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இருந்தாலும் சாய்பல்லவி அதிர்ஷ்டம் படத்திற்கு பலம் சேர்க்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து அவருக்கு இதுபோன்ற கதாபாத்திரம் கொடுத்து படத்தை சூப்பர் ஹிட் கொடுத்து விடலாம் என சில கூட்டம் இணைப்பது அப்பட்டமாக தெரிகிறது. அமரன் திரைப்படம் வெளியாகி 100 நாட்களை கடக்காத நிலையில் இதில் சாய் பல்லவியை பலரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத் தன்னுடைய வழக்கமான இசையால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார். படத்தின் ஹீரோ நாக சைதன்யா பல இடங்களில் ஒரே பிரச்சனையை கொடுத்து போர் அடிக்க வைப்பது தான் ரசிகர்களை சலிக்க வைத்துள்ளது.
ஹீரோ என்றாலும் பாதி படத்தில் அவர் இல்லாமல் போவது படத்திற்கு பெரிய தோல்வியை ஏற்படுத்துகிறது. இயக்குனர் சந்தோ முந்தட்டி வலுவான கதையை வைத்திருந்தாலும் அதை சரியான திரை கதையாக ரசிகர்களுக்கு கொடுக்காமல் தோல்வியடைந்துள்ளார். முதல் பாதி பல இடங்களில் சொதப்பி இருந்தாலும் பாகிஸ்தானில் நடப்பதாக கூறப்படும் சில காட்சிகள் கூடுதல் நாடகத் தன்மையோடு இருப்பதும் படத்தில் ரசிகர்களை ஒன்ற முடியாமல் செய்கின்றது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் கா பெ ரண சிங்கம் கொஞ்சம் சீதாராமன் என்று கலந்து கொடுப்பதுதான் இந்த தண்டையர் படத்தின் கதையாக அமைந்துள்ளது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…
மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம்…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல எல்ஜிபிடிகியூ சமூக ஆர்வலரும், ஒப்பனைக் கலைஞருமான மேட் சந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்…
காஞ்சிபுரம் பொன்னேரி கரை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் பழனி ராஜ் - ஞானசௌந்தரி தம்பதியினரின்…
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா பேகம் என்பவர்…