தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் விஷால். தற்பொழுது விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் மற்றும் SJ.சூர்யா உடன் இணைந்து ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி இன்னும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சைகை மொழியில் பேசிய நடிகை அபிநயா ‘விஷால் என் Dream Hero! ‘ எனக்கூறி அவருக்கு நன்றி தெரிவித்தார். நடிகை அபிநயா வாய் பேச முடியாதவர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மேடையில் அவர் சைகை மொழியில் பேச அதைப்பார்த்த நடிகர் விஷாலும் கண்கலங்கி விட்டார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…
சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் இந்த வீடியோ, பார்ப்பவர் நெஞ்சங்களை பதற வைக்கிறது. ஒரு பெண் தனது கணவர்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி மற்றும்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, சினிமாவில் இருந்து விலகப்போவதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய படத்தில்…
மதுபோதை தகராறைத் தடுத்து நிறுத்த முயன்ற 38 வயது சமையல் கலைஞர் சுமன் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் கேரளா…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோவில், ஒரு தாய் தனது மூன்றரை வயது சிறுவனிடம், "நான் உன்னை…