விஜய் ரோடு ஷோவின் போது தாரபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நேற்று , தாராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் தாராபுரம் – கரூர் சாலை வீராச்சிமங்கலம் பிரிவு பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார்.
அதே நேரத்தில், அப்பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவும் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிக்கச் சென்றதால், ஒரே இடத்தில் இரு கட்சியின் தொண்டர்களும் பெருமளவில் திரண்டனர். தொடர்ந்து இரு தரப்பினரும் போட்டிபோட்டுக்கொண்டு கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். ஒருகட்டத்தில் கார்த்திகா தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்றவாறு நாம் தமிழர் கட்சியின் கொடியைச் சுற்றி வாக்கு சேகரிக்க, தவெக தொண்டர்கள் ‘டிவிகே… டிவிகே…’ என முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
சட்டம்-ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கும் வகையில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க காவல்துறையினர் தலையிட்டு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்ப தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் வீதி மறியலில் ஈடுபட்டதை அடுத்து, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வேட்பாளர் கார்த்திகா உட்பட சுமார் 200 பேரைக் குண்டுக்கட்டாகக் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது வேட்பாளர் கார்த்திகா வெளியிட்ட வீடியோ பதிவில், “முதல்வர் விஜய் வருகிறார் என்பதற்காக மற்றவர்கள் பரப்புரை செய்யக்கூடாதா? ஜனநாயக நாட்டில் 22 வேட்பாளர்களில் நானும் ஒருத்தி. விஜய்யை நாங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; எங்களைக் கண்டு அவர் ஏன் பயப்படுகிறார்? ‘ரொம்ப தவறு விஜய், ரொம்ப தவறு… நீங்கள் போடும் ஆட்டம் தமிழ்நாட்டில் ரொம்ப நாள் நீடிக்காது'” என்று தனது ஆத்திரத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…
நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…
அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…
கோட்டயம் மாவட்டத்தில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு நிற்காமல் அதிவேகமாக வந்த டொயோட்டா இன்னோவா கார், பல வாகனங்கள் மீது…
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், தடுக்க வந்த மற்றொரு நண்பர் கத்தியால்…