ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பிரபல டோங்க் ரோடு பகுதியில் இயங்கி வரும் ‘தி வாட்ச் ஃபேக்டரி’ என்ற ஆடம்பர கடிகார விற்பனையகத்தில், நள்ளிரவில் புகுந்த மர்மக் கும்பல் ரூ.3 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள விலையுயர்ந்த கடிகாரங்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை வேளையில் வந்த கொள்ளையர்கள், ஷோரூமின் பிரதான ஷட்டரின் பூட்டைத் துணிச்சலாக உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் கடையிலிருந்த கோடிக்கணக்கிலான ராடோ ரக ஆடம்பரக் கடிகாரங்களைச் சுருட்டிக்கொண்டு தப்பியோடியுள்ளனர். கடையில் இருந்த சரக்கு இருப்பு பட்டியலைச் சரிபார்த்த பின்னரே துல்லியமான இழப்பு விவரம் தெரியவரும் என உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. அந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய ராஜஸ்தான் மாநிலக் காவல்துறை, தப்பியோடிய கொள்ளைக் கும்பலைப் பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் நடிப்பில், இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்று…
கர்நாடக மாநிலம் பெங்களூரு வித்யாரண்யபுரா முதன்மைச் சாலையில் இயங்கி வரும் 'மை சலூன் அண்ட் ஸ்பா' மையத்திற்குள் கடந்த அக்டோபர்…
கர்நாடக மாநிலம் மடிக்கேரி - பாகமண்டலா முதன்மைச் சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த கார்…
குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில், கணவனைப் பிரிந்து வேறொரு நபருடன் வாழச் சென்ற திருமணமான பெண் ஒருவர் மீது, 'புனிதப்படுத்தும்…
பெட்ரோல் பங்க்கிற்கு காரில் வந்த பெண் ஒருவர், டீசல் போடுவதற்காகக் காரை நிறுத்திவிட்டு, போனில் பேசுவது போல நடித்துக் காரை…
மின்சாரக் கம்பியை இணைத்து வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக நீரில் மின்சாரம் பாய்ந்ததில் அனுராக் யாதவ் எனும் வாலிபர் பரிதாபமாக…