குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள சுவாமிநாராயண் கோயில் குளியலறையில், கல்லூரி மாணவிகள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆறாம் தேதி கல்லூரிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். செல்போன் சிக்னல் மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அவர்கள் இருவரும் கோயில் வளாகத்திற்குள் செல்வது உறுதி செய்யப்பட்டது. உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த குளியலறையை உடைத்துப் பார்த்தபோது, மாணவிகள் சடலமாக மீட்கப்பட்டனர்.
சம்பவ இடத்திலிருந்து ஊசிகள் மற்றும் மருந்து பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தற்கொலை செய்துகொள்வது எப்படி என்று தேடிய அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் வளாகத்தில் அரங்கேறிய இந்தத் துயரச் சம்பவம் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…