கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரை பகுதியில் அறக்கட்டளை நடத்தி வந்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாமஸ் கொரோஸ் டென்ஸ்கி (60) என்பவர் தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு வீசிய சுனாமி பேரலைக்கு பிறகு குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த இவர், பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தார். தொடர்ந்து சொத்தவிளை பகுதியில் சொந்த வீடு கட்டி தங்கி, அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி பல்வேறு சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்தார்.
இடையில் சில ஆண்டுகள் தனது தாய்நாடான ஆஸ்திரியாவிற்குச் சென்று திரும்பி வந்த தாமஸ், கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வருட விசா அனுமதியுடன் மீண்டும் இந்தியா வந்து சொத்தவிளை வீட்டில் தங்கியிருந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக அவர் வீட்டை விட்டு வெளியே வராத சூழலில், அவர் வளர்த்து வந்த நாய்கள் தொடர்ந்து குரைத்துக் கொண்டே இருந்தன. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் பரத் அருணுக்குத் தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து சென்று பார்த்தபோது, தாமஸ் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உயிரிழந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தகவலறிந்து சுசீந்திரம் காவல் ஆய்வாளர் அருள் பிரகாஷ் மற்றும் உதவி ஆய்வாளர் தனீஷ் லியோன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். உடற்கூறாய்வு பரிசோதனைக்காக உடலை நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாமஸின் மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கடந்த அக்டோபர் 3-ம் தேதி நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்தில் பயணித்த தாமஸுக்கும், விளவங்கோட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாபு என்பவருக்கும் இடையே பையை வைப்பது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பேருந்து கண்ணாடியில் மோதி தாமஸுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டச் சொட்டக் கோட்டார் காவல் நிலையத்திற்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தாமஸ் மர்மமான முறையில் இறந்து கிடப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…