2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்து, வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவர்களான ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் திமுக கூட்டணியின் சார்பாகக் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது கோட்டையான போடிநாயக்கனூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். நீண்டகாலம் அதிமுகவின் முகமாக இருந்த இவர், தற்போது திமுகவின் ஆதரவுடன் களம் காண்பது அந்தத் தொகுதியில் ஒரு புதிய அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
அதேபோல், டெல்டா மாவட்டத்தின் செல்வாக்குமிக்க தலைவரான ஆர். வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அவர், தற்போது திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அந்தப் பிராந்தியத்தில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
மேலும், தென் தமிழகத்தின் முக்கியப் புள்ளியான மனோஜ் பாண்டியன் ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பகுதிகளில் அக்கட்சியின் முன்னாள் சீனியர் தலைவர்களையே திமுக களம் இறக்கியிருப்பது, அதிமுகவின் வாக்கு வங்கியைச் சிதைக்கும் ஒரு தந்திரோபாய உத்தியாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலுக்கு இடையே, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை "காலத்தின் கட்டாயம்" எனப் பொருள்படும் வகையில்…
அதிமுக மற்றும் திமுக இடையே கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதாக நிலவி வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என்று அதிமுக நிர்வாகி…
தமிழக வெற்றிக் கழகத்தின் சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் செயல்பாடுகள் "ஆணவத்தின் உச்சம்" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்…
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெற இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக-விடம் ஆதரவு கேட்டு வரும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கான தீவிர…