#image_title
தேவா என்று அழைக்கப்படும் தேவனேசன் சொக்கலிங்கம் தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். சிறுவயதிலிருந்தே இசையால் ஈர்க்கப்பட்ட தேவா சந்திரபோஸ் உடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பின்னர் கிளாசிக்கல் ம்யூக்சிகை கற்க தொடங்கிய தேவா, லண்டனில் உள்ள டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக்கில் இசை படிப்பை முடித்தார். தேவா தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. ஆரம்பத்தில் தேவா அவர்கள் தூர்தர்ஷன் மற்றும் பொதிகை சேனலில் சில காலம் பணிபுரிந்தார்.
வயலும் வாழ்வும் நிகழ்ச்சிக்கு பாடல்களை இயற்றினார். சில நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். அதன் மூலம் சினிமா வாய்ப்பினை பெற்ற தேவா 1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கு ஏத்த மகராசா’ திரைப்படத்தில் மூலம் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். அடுத்ததாக ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி அடைந்ததால் தேவா அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அவருக்கு ‘தேனிசைத் தென்றல் தேவா’ என்ற பெயரும் கிடைத்தது.
#image_title
90களில் உச்சத்தில் இருந்த தேவா இசையமைத்த ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘நேருக்கு நேர்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘வாலி’, ‘குஷி’ ஆகிய படங்கள் மெகா ஹிட் ஆனது. கானா பாடல் கலாச்சாரத்தை ஆரம்பித்த பெருமை தேவா அவர்களையே சேரும். அதிலிருந்து ‘கானா பாடல் தேவா’ என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
#image_title
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இசையமைப்பபாளர் தேவா, sp பாலசுப்பிரமணியம் என்னிடம் ஒருநாள் அண்ணாமலை படத்துல எல்லா பட்டையும் என்னை பாட வச்ச. ஆனா “ஒரு பெண் புறா” அந்த பாடலை மட்டும் ஏன் என்னை பாட வைக்கல. உன்கிட்ட பேசவே எனக்கு புடிக்கல அப்படினு விளையாட்டுக்கு சொன்னாரு. அந்த பாட்டை நான் தாஸ் வச்சி பாட வைத்தேன். இவரு இப்படி கேட்டதால் அதுக்கப்புறம் கன்னடத்துல அதே பாடலை SPB யை வைத்து பாட வைத்தேன் என்று கூறியுள்ளார்.
தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…
புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…
தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…
ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…