“21 ஆண்டுகளாக புகை போட்டு பிழைப்பு…” SIR பதிவின் மூலம் சிக்கிய கொலை குற்றவாளி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

Spread the love

சென்னை எண்ணூர், இந்திரா நகரைச் சேர்ந்த 35 வயதுடைய ரபீக் என்பவர், கடந்த மே 24, 2004 அன்று தன் வீட்டில் நண்பர் தாஜிதீன் என்பவருடன் மது அருந்தியுள்ளார். அப்போது, தாஜிதீன் ரபீக்கின் மனைவி ரசூல் பீபி குறித்து தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த ரபீக், தாஜிதீனைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

இந்தக் கொலை வழக்கில், ரபீக் குறித்து 21 ஆண்டுகளாக எந்தத் தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில், உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணையைத் தொடங்கினர். ரபீக்கின் உண்மையான பெயர் ராஜேந்திரன் என்றும், அவரது தந்தை பெயர் பரமசிவன் என்றும், பூர்வீகம் கடலூர் ஆக்கனூர் பகுதி என்றும் வாக்காளர் பட்டியல் (SIR – சிறப்புத் தீவிர திருத்தப் பதிவு) விவரங்கள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படையினர் சாதாரண உடையில் சென்று, SIR படிவத்திற்கான விவரங்களைக் கேட்பது போல விசாரணை நடத்தி, புகைப்படம் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டனர். கொலைக்குப் பிறகு ரபீக் மதம் மாறி, நிரந்தரமாக ஓரிடத்தில் தங்காமல், அரியலூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் சாம்பிராணி புகைபோட்டுப் பிழைப்பு நடத்தி வந்ததும், இரவு நேரங்களில் பேருந்து நிலையங்களில் தங்கியதும் தெரியவந்தது.

இறுதியாக, பெங்களூருவின் மாண்டிவாளா சந்தைப் பகுதியில் 57 வயதான ரபீக்கை தனிப்படையினர் கைது செய்தனர். 21 ஆண்டுகளுக்குப் பின் கொலைக் குற்றவாளியைக் கைது செய்த எண்ணூர் தனிப்படை போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.

Devi Ramu

Recent Posts

உச்சகட்ட கொடூரம்…! தந்தையின் தலையை தரையில் மோதி கொன்ற மகன்… நடுரோட்டில் அரங்கேறிய பயங்கரம்… பகீர் பின்னணி…!!

ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…

12 minutes ago

அட என்னங்க இது…? கிராம மக்களை தரையில் அமர வைத்து லத்தியால் மிரட்டிய இன்ஸ்பெக்டர்… சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்…!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…

27 minutes ago

கடவுளே… இப்படியா ஆகணும்…? தலையில் குத்திய இரும்பு கம்பிகள்… துடிதுடித்த வாலிபர்… கதறும் குடும்பத்தினர்… பெரும் சோகம்…!!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…

1 மணத்தியாலம் ago

தவெக ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறாங்களா…? அப்படி நடந்தால்…! அமைச்சர் செங்கோட்டையனின் அனல் பறக்கும் பேச்சு…!!

தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…

2 மணத்தியாலங்கள் ago

“சிறுவனுடன் உல்லாசம்…” நேரில் கண்ட மாணவன்… ஜூஸில் விஷம் கலந்து தீர்த்து கட்டிய இளம்பெண்… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…

2 மணத்தியாலங்கள் ago

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

3 மணத்தியாலங்கள் ago