தாத்தாவான எம்.எஸ் பாஸ்கர்.. சர்ப்ரைஸ் கொடுத்து மருமகளை வரவேற்ற தாய்மாமன்.. வைரலாகும் வீடியோ..!

Spread the love

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் எம் எஸ் பாஸ்கர். கலைத்துறையில் ஒரு டப்பிங் கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து கங்கா யமுனா சரஸ்வதி, மாயாவி மாரிச்சன் ஆகிய தொலைக்காட்சிகளில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற நகைச்சுவை தொடர் இவருக்கு நல்ல பெயரையும் பெற்று தந்தது. அதனைத் தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான அவர் கஜேந்திரா, போஸ், திருப்பாச்சி, கிரீடம் மற்றும் வரலாறு என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார்.

சந்தோஷ் சுப்பிரமணியம் மற்றும் தசாவதாரம் ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த குணசித்திர நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும் பெற்றார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் எம் எஸ் பாஸ்கர் ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஆதித்யா பாஸ்கர் என்ற மகனும் ஐஸ்வர்யா பாஸ்கர் என்ற மகளும் உள்ளனர். எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் சுதாகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பள்ளி நண்பரான சுதாகரை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கர்ப்பமாக இருந்த ஐஸ்வர்யாவுக்கு தீபாவளி பண்டிகை நாளன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தச் செய்தியை ஐஸ்வர்யா பாஸ்கர் புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த நிலையில் தாத்தாவாகிய எம்எஸ் பாஸ்கருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் வீட்டிற்கு வந்த மகாலட்சுமியை எம்எஸ் பாஸ்கரின் மகனும் ஐஸ்வர்யா பாஸ்கரின் அண்ணனும் ஆன ஆதித்யா பாஸ்கர் பட்டாசு வெடித்து கொண்டாடி சர்ப்ரைஸ் கொடுத்து வரவேற்றுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

44 seconds ago

“விஜய் யாருடைய ஓட்டைப் பிரிப்பார்?”… அதிமுக, திமுக-வுக்கு செக் வைத்த பூங்குன்றன்… 2026-ல் நடக்கப்போகும் அந்த ‘அமைதியான புரட்சி’ இதுதான்…!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…

3 minutes ago

“டிகிரி, டிப்ளமோ முடித்தவரா நீங்க… RCFL-ல் காத்திருக்கும் நவரத்னா வேலை… மாதம் ₹60,000 வரை சம்பளம்.. 188 காலிப்பணியிடங்கள்… ஏப்ரல் 27-க்குள் அப்ளை பண்ணுங்க..!!!

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…

4 minutes ago

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

8 minutes ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

15 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

19 minutes ago