தாராபுரம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது உச்சக்கட்டப் பிரச்சாரத்தால் சூடுபிடித்துள்ளது. கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்யபாமா, தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனால் காலியான இத்தொகுதிக்கு வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தவெக சார்பில் மீண்டும் அதே சத்யபாமாவே வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதேபோல் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமான முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின் போது, தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு கேட்பதற்குப் பதிலாக, பழக்க தோஷத்தில் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு எம்.ஆர். விஜயபாஸ்கர் கோரினார். இதைக் கேட்டதும் அங்கிருந்த வேட்பாளர் சத்யபாமா உட்படக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சிரிப்பலை ஏற்பட்டது.
தனது தவறை உடனே உணர்ந்து சுதாரித்துக் கொண்ட எம்.ஆர். விஜயபாஸ்கர், லாவகமாகச் சமாளித்தவாறு தவெகவின் ‘விசில்’ சின்னத்திற்கே வாக்களிக்குமாறு மீண்டும் மக்களிடம் கேட்டுக் கொண்டார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தற்போது அதே மக்களிடம் விசில் சின்னத்தில் வாக்கு சேகரித்து வரும் சூழலில், இச்சம்பவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களையும் ஒரு கணம் குழப்பத்திலும் ஆழ்த்தியது.
கடந்த தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா, மரகதம் குமரவேல் உட்பட ஆறு சிட்டிங் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சி மாறியது குறித்துத் தொகுதியில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்தவாறே தவெக நிர்வாகிகள் சத்யபாமாவுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுபோதையில் நிலைகுலைந்த பெண் ஒருவர் நடுரோட்டில் கடுமையான ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தார். அவ்வழியே சென்ற பொதுமக்களை வலுக்கட்டாயமாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் கௌதம் புத்த நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த எட்டா மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞர்…
தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…
உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…
சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…