கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமண்ணா. இவரது மனைவி சுவாதி. இந்த தம்பதியினருக்கு 12 வயதில் மகள் இருந்துள்ளார். கடந்த 2- ஆம் தேதி இரவு ராமண்ணா நைட் ஷிப்ட் வேலைக்கு சென்ற பிறகு சுவாதி தனது மகளுடன் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 10.30 மணிக்கு ராமண்ணாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிறுமி அம்மா மருந்து சாப்பிட்ட பிறகு அசாதாரணமாகவும், அமைதி இன்றியும் இருக்கிறார்.
எனக்கு பயமாக இருக்கிறது என கூறியுள்ளார். அதற்கு ராமண்ணா அதெல்லாம் ஒன்றும் இல்லை. பயப்படாமல் இரு. நான் காலையில் வந்து விடுகிறேன் என மகளுக்கு தைரியம் கூறியுள்ளார். மறுநாள் காலை பணி முடிந்து வீட்டிற்கு சென்ற போது நீண்ட நேரமாக கதவு திறக்கப்படவில்லை. இதனால் ராமண்ணா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்து போது தனது 12 வயது மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாகவும், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட சுவாதி தனது மகளை கத்தி மற்றும் கத்திரியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடல் மீது ஏறி நின்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…
தற்போது 49 வயதாகும் லிஸி ஜோன்ஸ் என்பவர், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை டேவிட் டெரன்ஸ் பெத்திக்…
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…
அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…
தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…