குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் லோதிகா தாலுகாவிற்கு உட்பட்ட மோட்டாவாடா கிராமத்தின் வாடி பகுதிக்குச் சரியான தார்ச்சாலை வசதி இல்லாததால், அங்கு பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணை அழைக்கச் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேற்றில் சிக்கி வழியிலேயே நின்றது.
நிலைமையின் தீவிரத்தைப் உணர்ந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் மருத்துவ உபகரணங்களை எடுத்துக் கொண்டு, சேறும் சகதியுமான பாதையில் நடந்தே அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்றனர். அங்கு வீடே மகப்பேறு வார்டாக மாற, அப்பெண்ணிற்குப் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது.
இதையடுத்து, தாய் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினர், சாலை வசதி இல்லாத காரணத்தால் இருவரையும் மாட்டு வண்டியில் ஏற்றிப் பத்திரமாக ஆம்புலன்ஸ் வரை அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் லோதிகா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அடிப்படைச் சாலை வசதி கூட இல்லாமல் மாட்டு வண்டியில் தாய்-சேய் அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…