ரஷ்ய மாடலும், மிஸ் யுனிவர்ஸ் 2017 போட்டியாளருமான க்சேனியா அலெக்ஸாண்ட்ரோவா ஆகஸ்ட் 12 அன்று ரஷ்யாவின் ட்வெர் ஒப்லாஸ்டில் ஒரு விபத்தில் இறந்தார். அவர்களின் கார் சாலையின் நடுவில் ஓடிய ஒரு மான் மீது மோதியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு 30 வயதான மாடல் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஜூலை 5 ஆம் தேதி க்சேனியாவும் அவரது கணவரும் ர்ஷேவிலிருந்து வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. திடீரென ஒரு மான் சாலையில் பாய்ந்து வந்து அவர்களின் கார் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டது. பயணிகள் இருக்கையில் இருந்த க்சேனியாவுக்கு அதிகபட்ச அடி விழுந்தது.
அதே நேரத்தில் வாகனம் ஓட்டி வந்த அவரது கணவரும் காயமடைந்தார். அந்த மான் கால்கள் ஸ்போர்ட்ஸ் காரின் கண்ணாடியைத் துளைத்து, மாடலின் மண்டை ஓட்டை முன்பக்கத்திலிருந்து உடைத்துள்ளது. இதனையடுத்து அவர் மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்ற பிறகு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் க்சேனியாவும் அவரது கணவரும் திருமணம் செய்து கொண்டனர். மாடல் தனது திருமண புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…