சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் குறைந்தபட்சம் ஆயிரம் எபிசோட்களை நெருங்கிய பிறகு தான் முடிவுக்கு வரும். அதுவும் சில சீரியல்கள் எந்த அளவிற்கு இழுத்தடிக்க முடியுமோ அந்த அளவிற்கு இழுத்தடிக்கப்பட்டு மூன்று நான்கு வருடங்கள் கழித்து தான் முடிவுக்கு வரும். ஆனால் தற்போது ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டு வருவதால் சன் டிவியில் திடீரென்று எடுத்த முடிவு என்னவென்றால் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அடிபடுகின்றதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அதன்படி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய முக்கியமான சீரியல்கள் ஒவ்வொன்றாக முடிக்கப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் தான் சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது மிஸ்டர் மனைவி சீரியலும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 500 எபிசோடுகளைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி யில் சரிவை சந்தித்து வருவதால் இந்த தொடர் முடிவுக்கு வரவுள்ளது. சீரியல் தொடங்கப்பட்டபோது நடிகை ஷபானா ஷாஜகான் கதாநாயகியாக நடித்து வந்தார். ஹீரோவாக பவன் ராகவேந்திரா நடித்த நிலையில் அவருடன் லதா, அனுராதா மற்றும் ஜீவா ரவி உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
இந்தத் தொடரில் இருந்து ஹீரோயினியாக நடித்த ஷபானா திடீரென விலகிய நிலையில் அவருக்கு பதிலாக வானத்தைப்போல சீரியலில் சின்ன ராசுவின் காதலியாக நடித்த DeBjai modak என்பவர் கமிட்டானார். தற்போது பரபரப்பான கதைகளத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களின் பெயர் ஆதரவை பெற்ற மிஸ்டர் மனைவி சீரியல் டிசம்பர் 22ஆம் தேதி முடிவுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் இது ரசிகர்களை சற்று வருத்தமடைய வைத்துள்ளது.
கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…
சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…
தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…
பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…
மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…
பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…