“அமைச்சர் கோவிலுக்கு வந்தா நாங்க ஏன் வெளியே போகணும்” முருகன் கோயிலில் அதிகாரிகளுடன் பக்தர்கள் பயங்கர வாக்குவாதம்.. திடீர் பரபரப்பு..!!

Spread the love

மதுரை அழகர்கோவில் மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற சோலைமலை முருகன் கோயிலுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்தார். அப்போது, அமைச்சரின் வருகையை முன்னிட்டு அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள், தரிசனம் செய்து கொண்டிருந்த பக்தர்களைக் கோயிலை விட்டு திடீரென வெளியேற்றினர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பக்தர்கள், சென்னை உள்ளிட்ட மிக நீண்ட தூரங்களில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்த எங்களை, அமைச்சர் வருகிறார் என்பதற்காக வெளியே போகச் சொல்வது என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, அமைச்சர் கோயிலின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள தேங்காய் மற்றும் பூ பழக் கடைகளில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த கடைக்காரர்களிடம், “தேங்காய், பழங்கள் எவ்வளவு விலைக்கு விற்கிறீர்கள்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் 200 ரூபாய்க்கு விற்பனை செய்வதாகக் கூறினர். ஆனால், உடனடியாகக் குறுக்கிட்ட அங்கிருந்த கோயில் அதிகாரி ஒருவர், “இல்லை, 100 ரூபாய்க்குத்தான் விற்கிறார்கள்” என்று மழுப்பலாகப் பதிலளித்தார். இரு தரப்பிலும் இருவேறு பதில்கள் வருவதைக் கவனித்த அமைச்சர், “ஏன் இப்படி முரண்பட்ட பதில்கள் வருகின்றன? இனி பக்தர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் விலைப்பட்டியலைப் பலகையில் வைக்க வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது அங்கிருந்த உள்ளூர் நபர் ஒருவர் அமைச்சரிடம் நேரடியாக ஒரு பகிரங்கக் குற்றச்சாட்டைக் முன்வைத்தார். இக்கோயிலில் நடைபெறும் கடைகளுக்கான ஏலத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் மட்டுமே தொடர்ந்து கலந்துகொண்டு ஏலம் எடுப்பதாகவும், மற்றப் பொதுமக்களை யாரையும் ஏலம் எடுக்க அவர்கள் அனுமதிப்பதில்லை என்றும் முறையிட்டார். இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட அமைச்சர் ரமேஷ், இந்த ஏல நடைமுறைகள் குறித்துத் துறையின் சார்பில் முறையாக முழுமையான ஆய்வு செய்யப்பட்டு, தவறு நடந்திருந்தால் உரிய கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

7 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

10 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

19 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

20 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

35 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

41 minutes ago