விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன் முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு எம்.எல்.ஏ மைக்கைப் பிடித்து மேடையில் அச்சுறுத்தும் வகையில் பேசுவது சாதாரண விஷயமல்ல என்றும், அது பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினால் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயத்தான் செய்யும் என்றும், இந்த கைது நடவடிக்கையில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தை விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார், அப்போது முதலமைச்சருக்கு எதிராக ட்வீட் போட்டதற்காக பலர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்ததை நினைவு கூர்ந்தார். முதலமைச்சருக்கு எதிராக ஒரு வார்த்தை பேசியதற்காக 70 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், முதல்வரையோ, அவரது மகன் அல்லது மாப்பிள்ளையையோ ஏதேனும் விமர்சித்தால் கூட குண்டாஸ் போடப்பட்டதாகச் சாடினார். கடந்த ஆட்சியில் யாருமே முதல்வருக்கு மிரட்டல் விடுத்துப் பேசாத நிலையிலும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், இத்தேர்வு தமிழகத்திற்குத் தேவையில்லை என்பதும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எதிரானது என்பதும் தங்கள் அரசின் மாறாத நிலைப்பாடு என்று தெரிவித்தார். நீட் தேர்வில் ஆண்டுதோறும் குளறுபடிகள் நடப்பதால் ஆயிரக்கணக்கான தரமற்ற மருத்துவர்கள் உருவாகி வருவதாகவும், அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்றும் குற்றம் சாட்டினார். மேலும், திமுகவைப்போல ரகசியம் இருப்பதாகப் பொய்யான வாக்குறுதிகளைத் தங்களால் சொல்ல முடியாது என்றும், மத்திய அரசு தான் நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…
ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…
கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…