திமுக மேடையில் முதலமைச்சர் விஜய் குறித்து திமுக மகளிரணி நிர்வாகி ஒருவர் தரக்குறைவாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், மேடையிலேயே முதலமைச்சரை இழிவாகப் பேசிய அந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழியும், சென்னை மேயர் பிரியாவும் கலந்துகொண்டதுடன், அருகில் அமர்ந்திருந்து சிரித்து ரசித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்தச் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, “உங்கள் முன்னிலையில் நடந்த இந்தத் தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். நாகரிகம் இல்லாத இத்தகையப் பேச்சு திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கையாகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை அவமதிப்பது எந்த வகையான அரசியல் பண்பாடு என்றும் சாடியுள்ளார்.
ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல, பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் உண்மையான பெருமை இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கனிமொழியும் மேயர் பிரியாவும் இந்த விவகாரத்தில் காட்டும் கள்ள மௌனம், அநாகரிகமான அரசியல் கலாச்சாரத்திற்கு அவர்கள் அளிக்கும் ஒப்புதலாகவே பார்க்கப்படுவதாகக் கண்டனப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவினரின் இதுபோன்ற தொடர்ச்சியான அநாகரிகப் பேச்சுகளைத் தமிழ்நாட்டு மக்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், வரும் தேர்தல்களில் இதற்கு உரியத் தண்டனையை வழங்குவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் மேடைகளில் நாகரிக வரம்புகளை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது பொதுவெளியில் வலுத்து வருகிறது.
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக பல்வேறு முக்கிய எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தீவிர ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை…
திருமணமாகி தலா இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஜோடி ஒன்று, கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்து ஒரே…
மதுரை மத்திய மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிப் பொறுப்புகளை வழங்குவதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சம் கோரப்படுவதாகக் கூறப்படும்…
அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் தலைமையில், மடத்துக்குளம் அருகே உள்ள…
தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் விசிக கட்சிகளை மையமாகக் கொண்டு புதிய கூட்டணி நகர்வுகள் தொடர்பான தகவல் அரசியல்…
உத்தரப் பிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் கர்பா நடனமாட வந்த பெண் இன்ஃப்ளூயன்சருக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும்…